internet

img

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் வரும் 2020-ஆம் ஆண்டு முதல் விளம்பரங்கள் இடம்பெறும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நெதர்லாந்து நாட்டில், கடந்த மே 21-ஆம் தேதி, ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மாநாட்டு நடந்தது.  அதில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யும் வசதியை விரைவில் அளிக்க உள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டு இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல‌வசமாக உள்ள வாட்ஸ்அப் வருவாய் எதிர்நோக்கி விளம்பரங்களுக்கு இடம்கொடுக்க முடிவு செய்திருக்கிறது. ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்றவற்றிலும் வீடியோவுக்கு மத்தியிலும், பதிவுகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் வருவது போல் இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு விளம்பரங்கள் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.